அதிவேசக நெடும்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் மற்றும் கடுமையான காயங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, மோட்டார் வாகனச் சட்டத்தின் (அத்தியாயம் 203) விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் எண் மோட்டார் வாகனங்கள் (அதிவேக நெடுஞ்சாலைகள்) விதிமுறைகள் கடந்த செப்டெம்பர் 25 திகதியிட்ட 2455/29 என்ற விசேடவர்த்தமானி அறிவிப்பின் மூலம் திருத்தப்பட்டிருந்தது.
இதில் அதில் அதிவேகநெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த திருத்தப்பட்ட விதிமுறைகளை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் பதில் அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.


















