சீரற்ற வானிலை காரணமாக கடந்த 17 ஆம் திகதி முதல் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்து முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முதல் சீரற்ற வானிலை காரணமாக பதுளை பகுதியில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.














