தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன,; 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 36 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















