தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் 0774506602 என்ற விசேட தொலைபேசி இலக்கம்; அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்கள் எந்த நேரத்திலும் மேற்கண்ட எண்ணை அழைக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


















