மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்கு
உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிய நிலையில் இயங்கிய வெதுப்பகத்திற்கு 28 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிய நிலையில் இயங்கிய வெதுப்பகத்திற்கு எதிராக செம்பியன்பற்று பொதுச்சுகாதார பரிசோதகரான செ. மதுசனினால் நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மன்றானது வெதுப்பக உரிமையாளரிற்கு 28,000 தண்டப்பணம் செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

















