சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியாவில் சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்க விடப்பட்டன.
நல்லிணக்கத்திற்கான இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக மூவின மாணவர்கள், இளைஞர், யுவதிகள் ஊர்வலமாக மாநகரசபை மைதானத்திற்கு வருகை தந்திருந்ததுடன் மூவின மாணவர்களும் இணைந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டதுடன், தேசியக் கொடி தாங்கிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
அத்துடன் கவந்துகொண்ட மூவின மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்;கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், மதகுருமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


















