சுவிஸில் புளொட் உபதலைவர் மாணிக்கதாசனின் அஞ்சலி நிகழ்வு..
புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர்.மாணிக்கதாசன் மற்றும் அவருடன் இணைந்து உயிர்நீத்த தோழர்கள் இளங்கோ, வினோத் ஆகியோரின் இருபத்தேழாவது நினைவுதினம் இன்றையதினம் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் நினைவு கூறப்பட்ட்து.
புளொட் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் தோழர்.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு முதலில் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூர்ந்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், ஒருநிமிட மௌனவணக்கம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டோரினால் தோழர் மாணிக்கதாசனின் திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய புளொட் சுவிஸ் கிளை பொறுப்பாளர் தோழர்.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் எமது விடுதலைப் போராடடத்தின் பெயரால் மரணித்த அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது, எமது மக்களுக்கான சரியான நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை அதுக்காகப் போராடுவதே எனக் குறிப்பிடடார்.
இறுதியாக புளொட் சுவிஸ் கிளையின் உபநிர்வாகப் பொறுப்பாளர் தோழர்.ரமணனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.


















