2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 49,697ஆகும்.
அத்துடன் செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,752 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 10,527 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,344 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 9,105 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 5,144 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 17 இலட்சத்து 25 ஆயிரத்து 494 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

















