செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அண்ணாவியார் கலைச்சாரம் றோக்கு யூட்சன் செபசின்ரன் நெறிப்படுத்தலில் யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்தின் காப்புப் பாடல் ஆலயத்தில் நேற்று செம்பியன் பற்று பங்கு மக்கள் முன்னிலையில் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது
குறித்த தென்மோடி நாட்டுக்கூத்தானது வரலாற்று சிறப்பு மிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவான எதிர் வரும் வைகாசி மாதம் 26 திகதி அன்று பிற்பகல் 9:30 மணியளவில் மேடையேறவுள்ளது.
செம்பியன் பற்று பங்கு மக்களின் வரலாற்று ரீதியாக இடம் பெற்று வரும் பாரம்பரிய நிகழ்வான புனித செபஸ்தியார் திருவிழாவின் விருந்து உபசார நிகழ்வும் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் நேற்றையதினம் காப்பு பாடுதலை தொடர்ந்து மிக சிறப்பாக இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பகுதி முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டனர்.


















