-ஞானத்தமிழ்-
சைவப்புலவர் சு.செல்லத்துரையின் 4 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலைப்போட்டி பரிசளிப்பு விழாவும் அறக்கட்டளை தலைவர் த.தயானந்தன் தலைமையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய ஏழுர் அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா.நந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும், கலந்துகொள்ளவுள்ளதுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் வைத்திய கலாநிதி செ.பிரசாத் நினைவுப் பேருரையை நிகழ்த்தவுள்ளார். ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி சிவகாமி தர்மபாலா ‘தமிழ் வித்தகர்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார்.


















