ஜெயம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு நிறைவு மற்றும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, ‘அம்மா’ முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது, முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், உடுபுடவைகள் மற்றும் மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
குறித்த உதவிப் பொருட்களை ஜெயம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜெயம் நேரில் சென்று ‘அம்மா’ முதியோர் இல்ல நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
நிறுவனத்தின் ஆண்டு நிறைவு மற்றும் தீபாவளி மகிழ்ச்சியை சமூகத்துடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த மனிதநேய உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



















