-சப்தசங்கரி-
பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
மணலுடன் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் வழிமறித்தபோது, பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த நிலையில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்நிலையில், மணலை வீதியில் கொட்டிவிட்டு டிப்பர் தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


















