-ஞானத்தமிழ்-
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா மற்றும் இறையியல் பட்டப்படிப்பு ஆகிய கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இங்கு நடாத்தப்படும் இரண்டு வருட காலத்தை கொண்ட உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கு ஆர்வமுள்ளவர்களும் மூன்று வருட காலத்தை கொண்ட இறையியல் பட்டப்படிப்புக்கு கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாமெனவும் இக்கற்கைநெறிகள் வார இறுதி நாட்களில் இடம்பெறும் எனவும் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இக்கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்களை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கற்கை நெறியில் இணைந்து கொள்ள விரும்புவோர் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் எனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை 0767366655, 0779047651 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.















