தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி 7 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த தங்கத்தின் விலை நேற்றுவரை மாற்றமின்றி இருந்தது.
இதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 300,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதுடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 277,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 299,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 276,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















