தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்:
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலம், கடந்த ஜூன் 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில், சட்ட வரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, குழுநிலையில் முன்மொழியப்பட வேண்டிய பல சிறிய திருத்தங்களை அடையாளம் கணப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எந்த விவாதமும் இன்றி குழுநிலையின்போது பாராளுமன்றத்தால் அங்கீகரித்ததன் பின்னர் சட்டமூலம் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு அதே நாளில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.


















