இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதலாவது கூட்டமாக அமையவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
குறிப்பாக 2026 இல் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களைப் பிரயோகித்தல் மற்றும் அவ்விடயம் சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இக்கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.


















