-நினைவுகூருவோர் மீது சட்டநடவடிக்கை-
யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஆனால் உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார், மேலும் அவர் கூறுகையில், 30 வருடகால யுத்தத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூர்வதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமையுண்டு. அதற்கு தடையில்லை ஆனால் அந்த போர்வையில் பயங்கரவாத அமைப்பினை சார்ந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க முடியாது. நினைவுகூர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


















