தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சமீபத்திய டித்வா புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அற்றார் அழிபசி தீர்த்தல்; என்ற திட்டத்தின் மூலம் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது.
பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தின்கீழ் நேற்று முன்தினம் புதன்கிழமை கிளிநொச்சியில் குமாரபுரம், மயில்வாகனபுரம், கனகாம்பிகைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.
பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் வி. கிருஸ்ணவேணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரன், பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்கள் த.
திலக்சிகா, ஞா. ரஞ்சிதமணி ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கினர்.
இதற்கான நிதி அனுசரணையை, கனடாவிலுள்ள இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம், லண்டன் கூடல் அமைப்பு இணைந்து வழங்கியிருந்தன.


















