-சர்வதேச விசாரணையை மறுதலிக்க காரணம் அதுவே-
-பங்கில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு இணங்குங்கள் – கஜேந்திரகுமார்-
இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை அரசாங்கம் மறுப்பதற்கு காரணம் அவர்களும் அதில் பங்காளிகள் என்பதனால்தான் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உங்களிடம் குற்ற உணர்வு இல்லை என்றால் விசாரணைக்கு இணங்குங்கள் எனவும் கூறியுள்ளாhர்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களின் சகல துன்பங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சே காரணம் என்றும், இந்த அமைச்சை தமிழ் மக்கள் வெறுக்கின்றார்கள். யுத்தத்தின் போது மட்டுமல்ல. அதற்கு பின்னரும் மக்கள் படும் துன்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சே காரணம்.
இராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் விநியோகத்துடன் தொடர்புடையமை தொடர்பில் கூறியிருந்தேன். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வந்தால் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்வர். குறிப்பாக போதைப் பொருள் தொடர்பானவர்களை துரத்திச் செல்லும்போது அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் நுழைகின்றனர். பொலிஸில் முறையிட்டால் அதனை ஏற்க மறுக்கின்றனர். எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர். இதனை மறுத்தால் தமிழ் மக்கள் மேலும் மேலும் உங்களை சந்தேகிக்கும் நிலைமையே ஏற்படும்.
வடக்கு கிழக்கில் கரையோரத்தில் கடற்படையினர் இருக்கின்றனர். அங்கு சோதனை சாவடிகள் இருக்கின்றன. யுத்தத்திற்கு பின்னர்தான் இங்கே போதைப் பொருள் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் இருக்கும்போது இந்த போதைப் பொருள் இருக்கவில்லை.
இப்போது வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் பெருமளவில் பரவியுள்ளது. மறுபக்கம் பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கை சிங்கள மக்களுக்கு மாத்திரமானது அல்ல என தமிழ் மக்கள் நம்பக்கூடாது என்றால் யுத்தக் காலத்தில் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் நடந்தன என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இராணுவத்தினரின் ஊடாக வந்த காட்சி பதிவுக ளே இப்போது சாட்சிகளாக மாறியுள்ளன. இராணுவத்தில் நியாயமாக சிந்திப்பவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினாலேயே அவர்கள் அதனை வெளியிட்டுள்ளனர்.
இதில் இருந்து மீள வேண்டும் என்றால் சர்வதேச விசாரணைகளுக்கு இ ணங்கவேண்டும். குற்றவாளி கள் தண்டிக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தொடர்பில் நீங்கள் நீதிமன்றத்திற்கு புறம்பாக தீர்ப்பளித்து அவர்களை கொன்றுள்ளீர்கள்.
ஆதன்போது மக்களையும் கொன்றுள்ளீர்கள். இதனயே இனப்படுகொலை என்கின்றோம். இங்கே இராணு வத்தினருக்கும், அரசுக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் நீங்களே நீங்கள் விசாரிக்க முடியாது. சர்வதேச விசாரணைக்கு இணங்க வேண்டும்.
இல்லை யென்றால் கடந்த அரசாங்கத்திற்கும் உங்களுக்கும் இடையே வித்தியாசங்கள் இருக்காது. நீங்கள் ஏன் இந்த விடயத்தில் தயங்க வேண்டும். நீங்களும் இதில் பங்காளிகள் என்பதனாலேயே தயங்குகின்றீர்கள். நீங்கள் குற்ற உணர்வு உள்ளவர்களாக இருக்கக்கூடாது என்றால்,
தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் பழைய ஜே.வி.பி அல்ல. மாறியுள்ளீர்கள் என்றால், சர்வதேச விசாரணைக்கு இணங்கவேண்டும் என்றார்.


















