தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.
பருத்தித்துறை

திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில் இன்று காலை 8 மணி முதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வடமராட்சி மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் சைவ மதகுருக்கள், பருத்தித்துறை மௌலவி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
திருகோணமலை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் நடைபெற்றது. இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர்.
கொழும்பு
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு இன்று இறுதிநாள் அஞ்சலியினை செலுத்தினார்.
நினைவேந்தலின்போது ரவிகரன் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.
மன்னார்
திலீபனின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டதுஇந்நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உள்ளடங்கலாக பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

















