திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியின் அரசியல் தலையீடு உள்ளது என கூறியிருக்கும் அருண் ஹேமச்சந்திரா, சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், எனது மாவட்டமான திருகோணமலையில் நடக்கக் கூடாத, தவிர்க்கப்பட வேண்டிய ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. முதலில் இந்த சம்பவத்துக்கு நான் கவலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது.
ஒரு தரப்பினர் இதனை இனவாதமாக மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அத்துடன் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்ட வகையில் சேறு பூசுகிறார்கள். அரசாங்கம் என்ற அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என்றார்.

















