-ஞானத்தமிழ்-
திருநெல்வேலி சைவ வித்திய விருத்திச் சங்கம் நடாத்தும் திருமந்திர பெருவிழாவும் பரிசளிப்பும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சைவ வித்தியா விருத்திச் சங்க மண்டபத்தில் தலைவர் சு.சத்தியேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியகலாநிதி இ.சுரேந்திரகுமார் முதன்மை விருந்தினராகவும் இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்கள வடபிராந்திய அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மா.அனந்தலெட்சுமி சிறப்பு விருந்தினராகவும் ஆன்மீக பிரசாகரர் சங்க தலைவர் திருமதி அருள்பரன் துஸ்யந்தினி கௌரவ விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ் விழாவில் சிறப்புச் சொற்பொழிவை வைத்தியகலாநிதி ப.நந்தகுமார் நிகழ்த்தவுள்ளார்.


















