இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.
அதன்படி முதல் கட்டமாக வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான வேலைநிறுத்தம் 11 நாட்கள் கடந்துள்ள நிலையில் அதிகாரிகள் இதுவரை தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் தொழிற்சங்கப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அறிவிப்பதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


















