சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் நேற்று பதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயினை கட்டுப்படுத்த சம்பவ இடத்துக்கு உடனடியாக வருகை தந்த அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை ஆகிய இடங்களிலிருந்து தீ அணைப்புப் பிரிவினருடன் சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காப்பு குழுவினர், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் தீ விபத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், தென்கிழக்குப் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர்.


















