-ஞானத்தமிழ்-
யாழ். மாவட்ட செயலகமும், தென்மராட்சி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை நாளை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நடமாடும் சேவையில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனித வள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள் திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவை பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம், பொது மருத்துவ பரிசோதனை, கண்புரை பரிசோதனை மற்றும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் சேவைகள்(வறியவர்களுக்கு) என்பன இடம்பெறவுள்ளன.
இந்த நடமாடும் சேவையில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மக்களை கலந்துகொண்டு சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















