பொலனறுவை ரோயல் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல போட்டியில் யாழ். மகாஜன கல்லூரி மாணவர்கள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

17 வயது ஆண்கள் பிரிவில் வி. சாதுரியன் 55 கிலோ எடைப் பிரிவில் 129 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கமும், 17 வயதுப் பெண்கள் பிரிவில் ச.சானுஜா 81 கிலோ எடைப் பிரிவில் 75 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கமும், 20 வயது ஆண்கள் பிரிவில் ஜெ. ஜெனுசின் 109 கிலோ எடைப் பிரிவில் 195 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும், 20 வயது பெண்கள் பிரிவில் ர.ஸ்ரீவித்தகி 71 கிலோ எடைப் பிரிவில் 107 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.




















