அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.கயல்விழி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவையில் நடைபெற்று வருகிறது.
இதில் 20 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில்
யாழ். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.கயல்விழி 59 கிலோ எடைப் பிரிவில் 84 கிலோ பளுவைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

















