தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவியான பிரபாகரன் வினுசா தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி இலக்கிய போட்டித் தொடரில் பாடல் நயத்தல் போட்டியின் கனிஷ்ட பிரிவில் முதலிடம் பெற்றார்.
இந்நிலையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற தேசிய இலக்கிய விழாவில் இலக்கிய போட்டித் தொடரில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வில் மாணவி பிரபாகரன் வினுசாவுக்கு தங்கப் பதக்கமும் பணப் பரிசும் வழங்கப்பட்டன.
பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவியின் தேசிய ரீதியிலான சாதனை பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















