2025 இற்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய கராத்தேப் போட்டி 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் 20 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரவில் காட்டா போட்டியில் பங்கு கொண்ட சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவன் விஜயராஜ் தமிழ்நிலவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைந்துள்ளார்.
இவ்வருடம் இடம்பெற்ற தேசியமட்ட கராத்தேப் போட்டியில் வடக்கிற்கு கிடைத்த ஒரே பதக்கம் என்பதோடு, சென்ற வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய கராத்தேப் போட்டியிலும் இவர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் விஜயராஜ் தமிழ்நிலவன் என்பவருக்கான பயிற்சிகளை பயிற்சி ஆசிரியர் றென்சி.சி.விஜயராஜ் வழங்கியிருந்தார்.
மேலும் குறித்த வீரர் தாய்லாந்தில் இடம்பெற்ற சர்வதேச கராத்தேப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















