-ஞானத்தமிழ்-
இலங்கை பிரயோக புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே புள்ளிவிபர அறிவை மேம்படுத்தும் முகமாக தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பாடசாலைகளில் தரம் 10 மற்றும் 11 மாணவர்கள் கனிஷ்ட பிரிவாகவும் தரம் 12 மற்றும் 13 மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் சிரேஷ்ட பிரிவாகவும் பங்குபற்ற முடியும்.
இந்த தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிகள் மூன்று மொழிகளிலும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பாக https://forms.gle/KJFBtppo8BDvv5oo8 என்ற இணைப்பினூடாகப் பதிவு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை 0777324802 என்ற வட்சப் இலக்கத்துடன் 0112588291 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அல்லது www.iassl.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.














