இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படுகின்ற 14 வயது பிரிவினருக்கான சமபோச வெற்றி கிண்ணத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மகளிர் அணியும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணியும் இறுதிப் போட்டியக்கு தெரிவாகியுள்ளன.
மகாஜனக் கல்லூரி 14 வயது பெண்கள் அணியினர் களுத்துறை செக். ஜோன்ஸ் கல்லூரி அணியை 11.00 என்ற கோல் கணக்கிலும் கொழும்பு ஹெட்வே கல்லூரி அணியை 9:0 என்ற கோல்கணக்கிலும் எல்பிட்டிய ஆனந்தா மகாவித்தியாலய அணியை 10:0 என்ற கோல் கணக்கிலும், கவிசிங்கமுவ சிறி காமினி வித்தியாலய அணியை 6:2 என்ற கோல் கணக்கிலும் அரை இறுதிப் போட்டியில் களுத்துறை சிறி சிவாலி மகாவித்தியாலய அணியை 11:0 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இதேவேளை வரலாற்றில் முதலாவது தடவையாகத் தேசிய உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலியில் நடைபெற்ற தேசியமட்ட உதைபந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பொலநறுவை றோயல் கல்லூரியுடன் மோதி 6:3 என்ற கோல்கணக்கில் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாளை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியுடன் யூனியன் கல்லூரி அணி மோதவுள்ளது.


















