-பா.சதீஸ்-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் ‘ஆ’ பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் நடவடிக்கை நேற்று முன்தினம் மக்கள் மற்றும் பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மற்றும் பணிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே மேற்படி மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


















