-த.அம்பிகாவதி-
சண்டிலிப்பாய் பிரதேச செயலக தொழில்துறைத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
கல்லுண்டாய் மாதிரிக் கிராமத்தில் சிறுதொழிலில் ஈடுபட்டு வரும் மேற்படி பயனாளிகள் நால்வருக்கு இவை வழங்கப்பட்டன.


















