-செ.ரவிசாந்-
நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூஜை நிகழ்வு கடந்த புதன்கிழமை நல்லூரிலுள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
காலை 7 மணிக்கு விசேட அபிஷேக வழிபாடுகளைத் தொடர்ந்து திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து வலிகாமம் வலய ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சைவப் புலவர் சு.தேவமனோகரன் ‘ நோய் நீக்கம்’ எனும் தலைப்பில் உரை ஆற்றினார். நற்சிந்தனைப் பாடல்கள் பண்ணுடன் பாடப்பட்டமையைத் தொடர்ந்து முற்பகல் 11.45 மணியளவில் குருபூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.


















