வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திரத் தீர்த்தத் திருவிழா இன்று காலை 5:45 மணியளவில் நாகர்கோவில் இந்து சமுத்திரத்தில் இடம் பெற்றது.

முன்னதாக காலை 3:30 மணியளவில் பிரணவக்குருக்கள் தலைமையில் வசந்தமண்டப பூசைகள் இடம் பெற்று, 4:30 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்ட நாகதம்பிரான் 5மணியளவில் சமுத்திரத்தை வந்தடைந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ சமுத்திர தீர்தமாடல் இடம் பெற்றது.

ஆலயத்தின் பிற்பகல் இடம்பெறும் கேணித் தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.
இன்றைய திருவிழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.


















