-சொ.வர்ணன்- , -கஜிந்தன்-
ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இரண்டாவது தடைவையாக மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் குருகுலம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் செய்யப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெய கோபி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன் மற்றும் ஐனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் குருதிக்கொடை வழங்கியவருக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.


















