அரசாங்கத்தின் தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடுதழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
தன்னிச்சையான இடமாற்ற முறைமையை கண்டித்து நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் இன்று காலை 8 மணி தொடக்கம் போராட்டம் ஆரம்பமாகும்.
இதனால் ஏற்படக்கூடிய சேவை முடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும் வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் நியாயமான தீர்வினை வழங்கினால், வேலைநிறுத்தம் குறித்து மீளப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.


















