நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பில் 16 பேரும், சந்தேகத்தின் பேரில் 678 பேரும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 278 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 169 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 24 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 15 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4139 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

















