நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேளைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 3 கிலோகிராம் 321 கிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் 107 கிராம், ஐஸ், 48 கிராம் கொக்கெய்ன், 54 கிலோகிராம் 434 கிராம் கஞ்சா, 204, 548 கஞ்சா செடிகள், 11 கிலோ கிராம் 325 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 6,674 போதை மாத்திரைகள் மற்றும் 27கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய, 980 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 9 பேரும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், ஆயிரத்து 53 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு நால்வர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















