இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 9.30 க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி காலை 9.30 முதல் 10வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10 முதல் 11 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 11 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 5.30 வரை அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















