வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளில் பயன்படுத்தும் நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி எதிர்வரும் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொதுநூலக முன்றலில் இடம்பெறவுள்ளது.
எனவே அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தமது நிறுத்தல் , அளவைக் கருவிகளுக்கு முத்திரை இட்டுக் கொள்ளுமாறு நகராட்சி மன்றத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.


















