-ஞானத்தமிழ்-
மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவுனர் தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் பாடசாலையின் சிவமலர் மண்டபத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயாலாளர் திருமதி தனுஜா முருகேசன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஐமுனா இராஜசீலன் மற்றும் வலிகாமம் கல்வி வலய சங்கீதபாட ஆசிரிய ஆலோசகர் மா.தேவகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், நிறுவுனரின் பூட்டனும் தொழிலதிபருமான கு.அமிர்தலிங்கம் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பழைய மாணவரும் ஓய்வுநிலை உத்தியோகத்தருமான சி.சிவமோகன் நிறுவுனர் நினைவுப பேருரையை நிகழ்த்தவுள்ளார்.


















