சிகிரியா – அவுடங்காவா பகுதியில் உள்ள ஹோட்டில் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் களனி – தலுகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் நீராடியபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















