-க.கனகராசா-
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த இரு வியாபாரநிலையங்களிற்கும் உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படுத்தும் முகமாக வீதிக்கு அப்புறப்படுத்திய உணவக உரிமையாளருக்கும் எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்தினை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சுற்றாடலில் அமைந்துள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகம் மற்றும் பானிப்பூரி விற்பனை நிலையத்திற்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இரு உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 50000 தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


















