-செ.சுமந்தன்-
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் அருகில் இரவுவேளையில் வீச்சுவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை இரவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் வீச்சுவலை தொழிலுக்காக சென்றிருந்த குறித்த மீனவர் வீடு திரும்பாத நிலையில் அவரின் மனைவி, நேற்று காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து நடத்திய தேடுதலில், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தில் வேலு செந்தில்நாதன் (வயது – 45) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















