தங்காலை கடலில் படகொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று முன் தினம் காலை இடம்பெற்றுள்ளது.
இவர் நண்பர்களுடன் இணைந்து படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்து
கொண்டுள்ள நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர் தங்காலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவரெனவும் தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















