அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

2 வயதுடைய சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையிலே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரனின் உத்தரவில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம் நேற்று ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.



















