-ஞானத்தமிழ்-
பளை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அதிபர் கு.ரவீந்திரா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் பிரதம விருந்தினராகவும், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.அ.சிவனருள்ராஜா சிறப்பு விருந்தினராகவும், பளை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.திலீபன்,பழைய மாணவரும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளருமான சு. சுரேன், ஓய்வு நிலை மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் மற்றும் ஓய்வுநிலை விரிவுரையாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















