-த.சுபேசன்-
காசிநாதன் விமலநாதனின் “பஜனாமிர்தம்” தொகுப்பு நூல் மற்றும் “இனிய தமிழ் கற்போம் இந்து சமயம் அறிவோம்” ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு டச் வீதி மீசாலை மேற்கில் உள்ள பரமேஸ்வரி மணி மண்டபத்தில் நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தமிழ் இணையக் கல்விக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் மத்தியஸ்த பயிற்றுநர் ப.சனாதனசர்மா கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு ஆசிரிய வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளர் சி.இளந்திரையன், அகில இலங்கை அர்ச்சகர் குருமார்சபை தலைவர் க.கிருபானந்தக் குருக்கள், உலக சுகாதார நிறுவன ஆலோசகர் கா.ரகுநாதன், தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஈ.புனிதகுமாரி, நடன ஆசிரியர் ஸ்ரீ.விமலகுமாரி, வே.தியானந்தராஜகுருக்கள், ப.ஜெயக்குமாரக்குருக்கள், கு.கஜேந்திரக்குருக்கள், வி.பாலகுமாரக்குருக்கள், வே.சண்முகராஜகுருக்கள், கு.ரிஷாங்க குருக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூல் மதிப்பீட்டுரையை தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் க.முருகதாஸ் ஆற்றவுள்ளார்.


















