நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
நெடுந்தீவில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கடற்தொழிலுக்காக இரண்டு இளைஞர்கள் படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர்.

தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை கடல்சீற்றம் காரணமாக படகில் இருந்து ஒருவர் தவறி கடலுக்குள் விழுந்து காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து மற்றையவர் ஏனைய தொழிலாளிகளுக்கு அறிவித்ததை அடுத்து ,அவர்கள் தமது படகுகளில் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் நடாத்திய போதிலும் , காணாமல் போன தொழிலாளியை மீட்க முடியவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் காணாமல் போன கடற்தொழிலாளியை சக தொழிலாளிகள் தேடி வருகின்றனர்
















